விவசாயி வீட்டில் 8 பவுன் தங்க நகைகள் திருட்டு 
உள்ளூர் செய்திகள்

விவசாயி வீட்டில் நகை திருட்டு

மதுரை அருகே விவசாயி வீட்டில் 8 பவுன் தங்க நகைகள் திருட்டு போயின.

மாலை மலர்

மதுரை

மதுரை நாகமலை புதுக்கோட்டையை அடுத்த மணப்பட்டி தேவி நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 36) விவசாயி. இவர் நேற்று காலை வேலைக்கு சென்றார். அவரது தாய் தோட்டத்துக்கு சென்று விட்டார். மனைவி வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். 

அப்போது யாரோ மர்ம நபர்கள் முன் கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 8 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். 

இதுதொடர்பாக கண்ணன் நாகமலைபுதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். சப்இன்ஸ்பெக்டர் திருமலைராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

நாகமலை புதுக்கோட்டை குருசாமி நகரை சேர்ந்தவர் காந்தி (74). இவர் தமிழ்நாடு மின்  வாரியத்தில் செயற்  பொறியாளராக பணியாற்றி  ஓய்வு  பெற்றவர். கடந்த 1-ந் தேதி இவர் வீட்டை பூட்டிவிட்டு, பெங்களூரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுததி  யாரோ மர்ம நபர்கள் முன் கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். 

அங்கு விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லை. எனவே கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன்  திரும்பி சென்றனர். இது தொடர்பாக காந்தி நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

நாகமலை புதுக்கோட்டையில் ஒரே நாளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்தது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.