மேலூர்
மேலூர் அருகே உள்ள கருங்காலக்குடியை அடுத்துள்ள காடம்பட்டியை சேர்ந்தவர் பெரியகருப்பன். இவரது மனைவி ஆதி அம்மாள் (வயது 65).
இவர் இன்று காலை காடாம்பட்டி ரோட்டை கடக்க முயலும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் கை, கால்களில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஆதி அம்மாள் இறந்தார்.
மோதிய வாகனம் நிற்காமல் சென்றுவிட்டது. இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.