பிரம்மகுமாரிகள் நிகழ்ச்சி நடந்தது. 
உள்ளூர் செய்திகள்

திருமங்கலத்தில் பிரம்மகுமாரிகள் நிகழ்ச்சி

திருமங்கலத்தில் பிரம்மகுமாரிகள் நிகழ்ச்சி நடந்தது.

திருமங்கலம்

இந்திய சுதந்திர பவள விழாவையொட்டி பொன்னான பாரதம் நோக்கி துவக்க விழா திருமங்கலத்தில் நடந்தது.  நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக அன்னை பாத்திமா கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா, அரசு ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி பேராசிரியர் பூஜாஅன்பு கலந்துகொண்டனர்.

 ராஜஸ்தான் மாநில காட்லிவுட் ஸ்டுடியோ தமிழ் நிகழ்ச்சி தலைவர் ஜெயக்குமார், மாணவர்களுக்கு மனதை அமைதியாக வைத்துக்கொள்வது குறித்து கருத்துரை வழங்கினார். 

மதுரை பிரம்மகுமாரிகள் அமைப்பின் மூத்த ராஜயோக ஆசிரியை செந்தாமரை சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை திருமங்கலம் ராஜயோக தியான நிலையம் செய்திருந்தது. இதில் அன்னை பாத்திமா மற்றும் அரசு ஓமியோபதி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். 

முன்னதாக மகிழ்ச்சியுடன் மனநிறைவாக இருத்தல், அடிமைத்தனங்களில் இருந்து விலகி இருத்தல், சுய மாற்றம், நன்றி உணர்வு, தியான அனுபவம் ஆகிய 5 உறுதிமொழிகளை மாணவ மாணவிகள் எடுத்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் பரதநாட்டியம் ஆடிய மாணவிகளுக்கு நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மன சாந்தி என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட புத்தகம் வழங்கப்பட்டது.