மதுரை
சமயநல்லூர் துணை மின் நிலையத்தில் உள்ள அலங்காநல்லூர் பீடர் மற்றும் வாடிப்பட்டி துணை மின் நிலையம், மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் உள்ள சேந்தமங்கலம் பீடர் சோழவந்தான் துணை மின் நிலையத்தில் உள்ள தென்கரை பீடர் ஆகியவை களில் வருகிற 19 மற்றும் 20-ந் தேதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதனால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
19-ந்தேதி கோவில்பாப்பாக்குடி, பொதும்பு, அதலை, வட்டக்குறிச்சி, கீழநெடுங்குளம், குமாரம், அரியூர், சபரிகார்டன், ரங்கராஜபுரம், பிள்ளையார்நத்தம், மணியஞ்சி, வடுகப்பட்டி, கச்சைகட்டி, ராமையன்பட்டி, பூச்சம்பட்டி, சொக்கலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிபட்டி, பொந்து கம்பட்டி, சேந்தமங்கலம், உசிலம்பட்டி, முடுவார்பட்டி, தென்கரை, ஊத்துக்குழி, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்ப நாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம் பகுதிகளில் 20-ந்தேதி மின்தடை ஏற்படும்.
மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.