கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

கம்பம் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது

கம்பம் வடக்கு போலீசார் சர்ச் தெரு முன்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கம்பம்:

கம்பம் வடக்குபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த் தலைமையிலான போலீசார் சர்ச் தெரு முன்பு ரோந்துபணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது 8-வது வார்டு தாத்தப்பன்கோவில் தெருவை சேர்ந்த அப்பாஸ்(62) என்பவர் தடைசெய்யப்பட்ட லாட்டரிசீட்டுகளை வைத்திருந்தார்.

போலீசார் அவரை கைது செய்து லாட்டரிசீட்டுகளை பறிமுதல் செய்தனர்.