உள்ளூர் செய்திகள்

லாட்டரி விற்றவர் கைது

மேட்டுப்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட இணைய வழி லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்து வந்தனர்.இதையறிந்த போலீசார் லாட்டரி விற்றவரை கைது செய்தனர்.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது46). இவர், தினந்தோறும் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகிலுள்ள ஒரு மளிகை கடை முன் நின்று கொண்டு, தடை செய்யப்பட்ட இணைய வழி லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் வாழப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார், சசிகுமாரை கையும், களவுமாக பிடித்து, கைது செய்தனர்.

SCROLL FOR NEXT