மரத்தில் மோதிய லாரி. 
உள்ளூர் செய்திகள்

கடையம் அருகே கனிம வளங்கள் ஏற்ற வந்த லாரி மரத்தில் மோதி விபத்து

கனிம வளங்களை கேரளாவுக்கு ஏற்றி செல்ல இன்று காலை லாரி ஒன்று கடையம் பகுதிக்கு வந்து கொண்டிருந்தது.கடையத்திற்கு மேற்கே இரப்பன் பாலம் அருகே லாரி வந்தபோது, அதிக வேகத்தின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி அங்கிருந்த புளியமரத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் இருந்து கனிம வளங்களை கேரளாவுக்கு ஏற்றி செல்ல இன்று காலை லாரி ஒன்று கடையம் பகுதிக்கு வந்து கொண்டிருந்தது.கடையத்திற்கு மேற்கே இரப்பன் பாலம் அருகே லாரி வந்தபோது, அதிக வேகத்தின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி அங்கிருந்த புளியமரத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது.

இந்த விபத்தில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். மேலும் அவர் தூக்ககலக்கத்தில் இருந்தது தெரிய வருகிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சம்பவம் நடைபெற்றபோது அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. கடையம் பகுதியில் வேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT