உள்ளூர் செய்திகள்

லாரி பட்டறை ஷட்டரை உடைத்து ரூ.1.67 லட்சம் வயர்கள் திருட்டு

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் பட்ட றையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற இவர், நேற்று காலை வந்து பார்த்தார். வெல்டிங் வயர் உட்பட ரூ.1.67 லட்சம் மதிப்புள்ள வயர்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

சேலம்:

சேலம் செவ்வாய் பேட்டை கந்தசாமி பிள்ளைக்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). இவர் கிச்சிப்பாளையம் சிவன் கரடு பகுதியில் லாரிக்கு பாடி கட்டும் பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் பட்ட றையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற இவர், நேற்று காலை வந்து பார்த்தார். அப்போது பட்ட றையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரமேஷ், உள்ளே சென்று பார்த்தபோது வெல்டிங் வயர் உட்பட ரூ.1.67 லட்சம் மதிப்புள்ள வயர்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து ரமேஷ், கிச்சிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT