உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது

நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

மாலை மலர்

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்- இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் சேஷசமுத்திரம் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராமசாமி(47) தனது வீட்டின் அருகே சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து ராமசாமியைபோலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 13 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.