உள்ளூர் செய்திகள்

ஏரியூர் அருகே கள்ளச்சாராயம் விற்றவர் கைது

போலீசார் ராஜியை கைது செய்து அவரிடம் 5 லிட்டர் கள்ளசாராயத்தை பறிமுதல் செய்தனர்.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் செம்மேடு காவிரி ஆற்றங்கரையோரம் பகுதிக்கு சென்றபோது சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் சந்தேகம்படும்படி கையில் வெள்ளை நிற கேனுடன் நின்று கொண்டிருந்தார். அவர் போலீசார் வருவதை கண்டதும் கேனை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினார்.

உடனே போலீசார் சுதாரித்து கொண்டு அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்ததில், பென்னாகரம் அருகே மஞ்சாரஅள்ளியை அடுத்த டி.சோளப்பாடி கிராமத்தை சேர்ந்த ராஜி (வயது51) என்பவர் 10 லிட்டர் கேனில் கள்ளச்சாரயம் விற்பனை செய்தது தெரியவந்தது.

உடனே போலீசார் ராஜியை கைது செய்து அவரிடம் 5 லிட்டர் கள்ளசாராயத்தை பறிமுதல் செய்து சம்பவ இடத்திலேயே கீழே கொட்டி அழித்தனர்.

SCROLL FOR NEXT