உள்ளூர் செய்திகள்

சேலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி வக்கீல் பலி

சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் அயோத்தியாப் பட்டணத்தில் இருந்து கூட்டாத்துப் பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். ஏ.என்.மங்களம் பகுதியில் சென்றபோது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் சந்திரசேகரன் மீது மோதினார்.

மாலை மலர்

சேலம்:

சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மின்னாம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 66) வக்கீல். இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் அயோத்தியாப் பட்டணத்தில் இருந்து கூட்டாத்துப் பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். ஏ.என்.மங்களம் பகுதியில் சென்றபோது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் சந்திரசேகரன் மீது மோதினார்.

இந்த விபத்தில் வக்கீல் சந்திரசேகரன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் மணிகண்டன் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து காரிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

படுகாயம் அடைந்த மணிகண்டனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வக்கீல் சந்திரசேகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.