குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே உள்ள பெரிய பொன்மாந்துரையை சேர்ந்தவர் டேவிட் பிரான்சிஸ். இவரது மனைவி விஜிலூர்துேமரி (வயது26). இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.
லூர்து மேரிக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த அவர் தனது வீட்டிலேயே தூக்கு மாட்டிக் கொண்டார்.
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இது குறித்து தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.