உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி கூலித்தொழிலாளி சாவு

சம்பவத்தன்று கடைமடை ரெயில்வே கேட் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து அவர் மீது மோதியது.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தளவாய் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது65). கூலித்தொழிலாளியான

இவர் சம்பவத்தன்று கடைமடை ரெயில்வே கேட் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முனுசாமி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT