பெரியகுளம்:
பெரியகுளம் அருகே குள்ளப்புரத்தை சேர்ந்தவர் பாண்டி(43). கூலித்தொ ழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கடந்த 3 வருடங்களாக பெரியகுளம் முருகமலை புளியோடை பகுதியில் டேம் கட்டுவதற்காக காண்டிராக்ட் பணியில் ஈடுபட்டு வந்தார்.
சம்பவத்தன்று அங்கு வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக உயர்அழுத்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து பாண்டி தூக்கிவீசப்பட்டார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே பாண்டி இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் பெரியகுளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.