கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி வேட்டியும் பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் வயது 26. கூலித்தொழிலாளி. இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது.
இதனால் மனமுடைந்த வெங்கடேஷ் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.