கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ராமாபுரம் அடுத்த ஜக்கரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்திரபிரகாஷ் (வயது 39). கூலித்தொழிலாளி; அதே பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (55).
கூலித்தொழிலாளி. உறவினர்களான இவர்களுக்குள் நிலப்பிரச்னை இருந்த நிலையில் கடந்த, 6-ந் தேதி ஏற்பட்ட தகராறில் கண்ணன், சந்திரபிரகாஷை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார்.
இது குறித்து சந்திரபிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கண்ணனை கைது செய்தனர்.