உள்ளூர் செய்திகள்

லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு

கிருஷ்ணகிரி அடுத்த சூளகிரி லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

மாலை மலர்

சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பகுதியை சேர்ந்தவர் சேர்ந்தவர் குமாரவேல் (வயது20). இவர் ஓசூர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் இவர் இன்று காலை வழக்கம் போல் இருசக்கர வாகனத்தில் ஓசூருக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.  அப்போது சூளகிரி அருகே கொல்லப்பள்ளி பகுதியில் வந்த போது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக  மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக குமாரவேல் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.