சதீஷ்குமார் 
உள்ளூர் செய்திகள்

காரிமங்கலம் அருகே ஏரியில் பிணமாக கிடந்தார் வாலிபர் அடித்து கொலை?

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே ஏரியில் பிணமாக கிடந்த வாலிபர் அடித்து கொலை செய்யப் பட்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மாலை மலர்

காரிமங்கலம், 

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பைசுஅள்ளி ஏரியில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் பிணமாக கிடந்துள்ளார். 

இது குறித்து காரிமங்கலம் போலீசார் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் இறந்த வாலிபர், அடிலம் ஊராட்சி கூடகாரன் கொட்டாய் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சதீஷ்குமார் (வயது 24) என்பது தெரியவந்தது. 

பின்னர் இறந்த வாலிபரின் உடலை பிரேத பரி சோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தததால், முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் யாராவது அடித்து கொலை செய்து ஏரியில் வீசி சென்றார்களா?   அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்  அருகில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.