உள்ளூர் செய்திகள்

அவதூறு வழக்கு: வரும் 15ம் தேதி ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன் அனுப்பிய நீதிமன்றம்

கோவையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்தித்தார்.அப்போது தன்னைப் பற்றி அவதூறாக பேசியதாக கே.சி.பழனிசாமி கோவையில் வழக்கு தொடர்ந்தார்.

மாலை மலர்

சென்னை:

கோவையில் செய்தியாளர் சந்திப்பின்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னைப் பற்றி அவதூறாக பேசியதாக கே.சி.பழனிசாமி கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கே.சி.பழனிசாமி சார்பில் வழக்கறிஞர் சிவக்குமார் ஆஜரானார்.

இதையடுத்து, அவதூறு வழக்கு தொடர்பான விசாரணைக்காக எடப்பாடி பழனிசாமி வரும் 15-ம் தேதி ஆஜராக வேண்டும் என கோவை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றம் இன்று சம்மன் அனுப்பியுள்ளது.