வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். 
உள்ளூர் செய்திகள்

கொடைக்கானலில் வரிபாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல்

கொடைக்கானல் நகராட்சியில் வரி பாக்கி வைத்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

மாலை மலர்

கொடைக்கானல்:

கொடைக்கானல் நகராட் சிக்குட்பட்டு ஏராளமான கடைகள் உள்ளன. குறிப்பாக ஏரிச்சாலையில் அதிக அளவில் கடைகள் உள்ளன. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பி தொழில் செய்து வருகின்றனர்.

தற்போது கோடை காலம் தொடங்கிய நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலாத் தொழில் பாதிக்கப்பட்டது. தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது.

உள்ளாட்சி தேர்தலில் புதிதாக நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து நகர் பகுதியில் உள்ள கடைகள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டன. 

அதிகாரிகளின் ஆய்வில் பெரும்பாலான கடைகளில் தொழில் வரி மற்றும் வாடகை பாக்கி இருந்தது தெரிய வந்தது. இதற்காக பலமுறை அவர்களுக்கு அவகாசம் வழங்கி உள்ளனர். ஆனால் பெரும்பாலான வியாபாரிகள் வாடகை பாக்கி செலுத்த வில்லை.

இதனைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் நட்சத்திர ஏரி மற்றும் நகர்பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்து வாடகை பாக்கி நிலுவை வைத்த கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், வாடகை பாக்கி செலுத்த பலமுறை எச்சரிக்கை விடுத்தும் கட்டவில்லை. இதனால் கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. 

நகர் பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் வரி பாக்கி இருப்பது கண்டறியப்பட்டால் பூட்டி சீல் வைக்கப்படும் என்றனர்.