மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றபோது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

கூடங்குளம் ஹார்வர்டு பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

கூடங்குளம் ஹார்வர்டு இன்டர்நேஷனல் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக சாரண, சாரணியர் படை மாவட்ட செயலர் பால்துரை கலந்துகொண்டு கிண்டர் கார்டன் மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

வள்ளியூர்:

கூடங்குளம் ஹார்வர்டு இன்டர்நேஷனல் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் டாக்டர் தினேஷ் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக சாரண, சாரணியர் படை மாவட்ட செயலர் பால்துரை கலந்துகொண்டு கிண்டர் கார்டன் மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசி னார். நிகழ்ச்சியில் ஹார்வர்டு இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் செல்வராணி, ஹார்வர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளை வாழ்த்தி பேசினர்.

தொடர்ந்து மழலையர் பிரிவு மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் மழலையர் பிரிவு தலைவர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT