கரூர்:
அமராவதி அணையின் நீருபிடிப்பு பகுதியிலும் தொடர் மழை பெய்வதால் அணைக்கு அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது அணையின் முழுக் கொள்ளளவாக 90 அடிக்கு 87.87 அடி நீர் இருப்பதால் அணையின் பாதுகாப்புக் கருதி அணையில் இருந்து விநாடிக்கு 18000 கன அடி நீர் திறக்கப்பட்டு ஆற்றில் அதிகளவு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
இந்த தண்ணீரால் கரூர் ம ாவட்டம், சின்னதாராபுரம் பகுதிக்குட்பட்ட பெரியார் நகரில் கரூரையும், திருப்பூர் மாவட்டம் மூலுப்பட்டியையும் இணைக்கும் தரைபாலம் மூழ்கியுள்ளது.
இதனால் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மூலப்பட்டி, சுண்டக்காம்பாளையம், வேலாம்பூண்டி ஆகிய 7 கிராம மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கிராம மக்கள் சின்னதாராபுரம் பகுதிக்கு வருவதற்கு சுமார் 6 கி.மீ தூரம் சுற்றிவர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சின்னதாராபுரம் காவல் நிலைய போலீசார் இரண்டு பக்கமும் பேரிகார்டுகள் மூலம் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக , மீட்பு பணிகளுக்கு தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். அதன்படி, 30 கமாண்டோ வீரர்கள், ஆற்றில் மூழ்கியவர்களை மீட்க, பைபர் படகு, தண்ணீரில் மிதந்து வரும் பாம்புகளை பிடிக்க கருவிகள், லைப் ஜாக்கெட், டார்ச்லைட், கயிறுகள், நீர் இறைக்கும் மோட்டார், ஆம்புலன்கள், தீயணைப்பு னங்கள் தயார் நிலையில் உள்ளன. என்று மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.