உள்ளூர் செய்திகள்

ஐப்பசி அஷ்டமி பைரவருக்கு சிறப்பு பூஜை

ஐப்பசி அஷ்டமி பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம்

கரூர்:

ஐப்பசி மாத அஷ்டமியை ஒட்டி, கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையம் அருகே நஞ்சை புகழுரில் உள்ள பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில் கால பைரவ ருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யபட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின், சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதேபோல் புன்னம் சத்திரம் அருகே, புன்னை வன நாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் உள்ள காளபைரவர், திருக்காடுதுறையில் உள்ள மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோவிலில் உள்ள கால பைரவர். குந்தாணி பாளையம் நத்தமேட்டில் ஈஸ்வரன் கோவிலில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.