உள்ளூர் செய்திகள்

மாநில அளவிலான கோ-கோ போட்டி

மாநில அளவிலான கோ-கோ போட்டி நொய்யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு பள்ளியில் நடைபெற்றது தேசிய அளவில் நடைபெற உள்ள போட்டிக்கு 12 பேர் தேர்வு

வேலாயுதம் பாளையம்,

கரூர் மாவட்டம் நொய் யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் நட த்திய 67-வது மாநில அள வில் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான மாநில தேர்வு கோ-கோ போட்டி கள் நடைபெற்றது.போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயலட்சுமி தொடங்கி வைத்தார்.சென்னை, வேலூர், கடலூர், சேலம், கோவை, கன்னியாகுமரி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய 8 மண்ட லங்களில் தேர்வு பெற்ற 72 மாணவர்கள் பங்கேற்று விளையாடினர்.அதில் 18 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நடை பெற்ற இறுதிப்போட்டியில் 12 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய அளவில் நைடைபெறும் கோ-கோ போட்டியில் பங்கேற்க உள்ளனர்.இதில், நொய்யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வாசுகி, உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.