உள்ளூர் செய்திகள்

ஓய்வு பெற்ற காவலர் நல சங்க கூட்டம்

ஓய்வு பெற்ற காவலர் நல சங்க கூட்டம் நடந்தது. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாலை மலர்

கரூர்

கரூரில் மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

கூட்டத்தில் கடந்த 1-ந்தேதி முதல் தமிழக அரசால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அறிவிக்கப்பட்ட 4 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வது, தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்கும் மருத்துவபடியை ரூ.300-ஐ உயர்த்தி ரூ.ஆயிரமாக வழங்க வேண்டும், காவல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு கேண்டீனில் மலிவு விலையில் மருந்து மாத்திரைகள் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.