உள்ளூர் செய்திகள்

சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கரூர் கலெக்டர் அலுவலகத்தில்

மாலை மலர்

கரூர்:

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டுசமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில், திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை வாணி ஈஸ்வரி, தனித் துணை கலெக்டர் சைபுதீன்,கலெக்டரின் நேர்முக உதவியாளர் தண்டாயுதபாணி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சந்தியா மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.