உள்ளூர் செய்திகள்

மாயனூர் அருகே அடையாளம் தெரியாத வாலிபர் சடலம் மீட்பு

மாயனூர் அருகே அடையாளம் தெரியாத வாலிபர் சடலம் மீட்கப்பட்டது இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாயனூர் பஞ்சாயத்து மேல மாயனூர் காவிரி ஆற்றில், வெங்கமேடு கூட்டு குடிநீர் நீரேற்று நிலையம் பின்புறம், 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது தெரியவந்தது. இதுகுறித்து, ரெங்கநாதபுரம் வி.ஏ.ஓ. ஸ்டாலின் பிரபு, மாயனுார் போலீசில் புகார் அளித்தார். அதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT