கள்ளக்குறிச்சி அருகே மாடூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒன்றிய குழு சேர்மன் அலமேலு ஆறுமுகம் நினைவு பரிசு வழங்கியபோது எடுத்தபடம். 
உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நினைவு பரிசாக கருணாநிதி சிலை

தி.மு.க. முன்னோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி வழங்கினார்.அலமேலு ஆறுமுகம், கருணாநிதி சிலையை நினைவு பரிசாக வழங்கினார்.

மாலை மலர்

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே மாடூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க. முன்னோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி வழங்கி னார். இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கள்ளக்குறிச்சி ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம், கருணாநிதி சிலையை நினைவு பரிசாக வழங்கினார்.

அப்போது அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செய லாளர் உதயசூரின் எம்.எல்.ஏ., மாநில மகளிர் அணி துணை செயலாளர் அங்கையற்கண்ணி, கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட துணை செயலாளர் வாணியந்தல் ஆறுமுகம், வடக்கு ஒன்றிய செயலாளர் அரவிந்தன், சின்னசேலம் ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.