தக்கலை:
தக்கலை அருகே குழிக்கோடு வயல்கரை பகுதியை சேர்ந்தவர் ரெஜின் (வயது 32). இவரது நண்பர் ராஜேஷ். இவர்கள் இருவரும் மது அருந்திவிட்டு அந்த பகுதியில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் இருவரையும் சரமாரியாக தாக்கியது. ரெஜினை அரிவாளாலும், கல்லாலும் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள் ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்இன்றி ரெஜின் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ராஜேஷ் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக கோழிப்போர்விளையை சேர்ந்த வினித் (24), கூட்டமாவு பகுதியை சேர்ந்த பரத் லியோன் (24), குழிக்கோடு பகுதியை சேர்ந்த அருண் (23), ஜெபின் (24), ஜிஜிஸ் (24) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கள் கூறுகையில், எங்களது நண்பர் அனிசை மதுபோதை தகராறில் ரெஜின் தாக்கினார். இந்த பிரச்சினை தொடர்பாக ரெஜினிடம் கேட்க சென்றோம். இதில் எங்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாங்கள் அவரை சரமாரியாக தாக்கி னோம் என்றனர். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வினித், பரத்லியோன், அருண், ஜெபின், ஜிஜிஸ் ஆகிய 5 பேரையும் நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர். 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.
கொலை செய்யப்பட்ட
ெரஜின்