கன்னியாகுமாரி:
அஞ்சுகிராமம் அருகே உள்ள கோட்டவிளை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிச்சை.
இவரது மனைவி பாக்கியம் (வயது 52). இவர் வீட்டில் தூக்கில் தொங்கினார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் பாக்கியத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பாக்கியம் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அஞ்சு கிராமம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாக்கியம் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பலியான பாக்கியத்தின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.