உள்ளூர் செய்திகள்

திருவட்டார் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார்.இவருக்கு மது குடிக்கும் பழக்கமும் உண்டு.

கன்னியாகுமரி:

திருவட்டார் அருகே நீங்காரவிளை, முளகுமூடு, பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 27). இவர் சினேகா (25) என்ற பெண்ணை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வந்தார்.

இவருக்கு மது குடிக்கும் பழக்கமும் உண்டு. வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது மது அருந்தி விட்டு வந்து மனைவி சினேகாவிடம் தகராறு செய்வது வழக்கம்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மது குடித்துவிட்டு வந்து மனைவி சினேகாவை அடித்து கொடுமை படுத்தி உள்ளார். அவர் தனது 3 பிள்ளைகளையும் அழைத் துக் கொண்டு தன் தந்தை வீட்டுக்கு சென்றார். மனைவி தன்னை விட்டு சென்றதை எண்ணி மன வேதனையில் சுரேஷ் இருந்து வந்தார். சம்பவத் தன்று வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறி கம்பியில் தூக்கில் தொங்கி னார்.

இதை பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் பார்த்து சினேகாவுக்கு தகவல் கொடுத்தனர். அவர் வந்து பார்த்து உடனே திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சினேகா கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.