உள்ளூர் செய்திகள்

மார்த்தாண்டத்தில் கொத்தனார் தூக்கு போட்டு தற்கொலை

சில நாட்களாக ஏதோ மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே உள்ள பல்லன்விளை பறையன்விளையை சேர்ந்தவர் சோபனம் (வயது 61). கொத்தனாரான இவர் கடந்த சில நாட்களாக ஏதோ மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். பின்பு வெகு நேரமாகியும் அறைக்கதவு திறக்காமல் இருந்துள்ளது.

இதனால் அவரது மனைவி ராஜலட்சுமி, அவரது அறையில் சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.