கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

பாம்பன்விளையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

பாம்பன்விளையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.

மாலை மலர்

கன்னியாகுமரி:

மேலசங்கரன்குழி பகுதியைச் சேர்ந்தவர்  வசந்தகுமார் (வயது36), கொத்தனார். இன்னும் ஓரிரு நாளில் வெளிநாடு செல்ல இருந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று நாகர்கோவில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந் தார். பாம்பன்விளை ஆற்றுப் பாலம் பகுதியில் வந்த போது எதிரே முட்டத்தைச் சேர்ந்த   பிரதீஷ் (20) அவரது நண்பர் அம்மாண்டிவிளை பகுதியைச் சேர்ந்த  அனிஷ் (21) ஆகியோர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் வசந்தகுமார் மோட்டார்சைக்கிளில் மோதியது.

இதில் வசந்தகுமார்  மற்றும் பிரதீஷ் அனீஸ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். உடனே அருகில் இருந்தவர் கள் அவர்களை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வசந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயமடைந்த பிரதீஷ், அனுஷிக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வசந்தகுமாரின் சகோதரி லலிதா கொடுத்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பலியான வசந்தகுமாரின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது. இதையடுத்து அவரது உறவி னர்கள் ஏராள மானோர் அங்கு திரண்டு இருந்தனர். பலியான வசந்தகுமாருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.