கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மையம் செயல்பட்டு வருகிறது. இதன் தக்கலை வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையத்தின் சார்பாக உலக தாய்ப்பால் வார விழா கோழிப்போர் விளையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுதலை ஊக்குவிப்பதற்கான கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தாய்ப்பால் கொடுத்து அதிக ஆரோக்கியத்துடன் இருந்த குழந்தையினை தேர்ந்தெடுத்து அதன் பெற்றோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தக்கலை வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட தலைவர் நாகேஸ்வரி, வாள்வச்ச கோஸ்டம் பேரூராட்சி தலைவர் டென்சிங், ஒருங்கிணைப்பாளர்கள், அங்கன்வாடி ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.