உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் கிறிஸ்தவ ஆலய கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு

மின்விளக்கு அலங்காரம் செய்தபோது பரிதாபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி வாவத்துறை கடற்கரை பகுதியில் குருசடி உள்ளது. இங்கு திருவிழாவை யொட்டி கோபுரத்தின் உச்சியில் மின்விளக்கு அலங்காரம் செய்யும் பணி நடந்தது.

இந்த பணியில் ஆரல்வாய்மொழியை சேர்ந்த ஆபிரகாம் (வயது 45) என்பவர் ஈடுபட்டுகொண்டிருந்தார். அப்போது அவர் கோபுரத்தின் உச்சியில் இருந்து கால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் ஆபிரகாம் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆபிரகாம் உடல் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.