கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் மறியலில் கைதாகி மயங்கி விழுந்த 3 பெண்களுக்கு தொடர் சிகிச்சை

நாகர்கோவில் மறியலில் கைதாகி மயங்கி விழுந்த 3 பெண்களுக்கு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். 

நாகர்கோவில் தேரே கால்புதூர் நுள்ளி குளத்தின் கரையில் இருந்த வீடுகளை இடிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றம் கைவிடப்பட்டது. 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர். நாகர்கோவிலில் உள்ள பொதுத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மாவட்டத் தலைவர் திருமா வேந்தன் தலைமையில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட119 பெண்கள் உள்பட 147 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 147 பேரும் அந்த பகுதியில் உள்ள மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். 

மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பெண்கள் எங்களது பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை உண்ணாவிரதப் போரா ட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். இதனால் மதியம் சாப்பிடாமல் இருந்தனர். இதையடுத்து 4 பெண்கள் மண்டபத்தில் மயங்கி விழுந்தனர். 

அவர்களை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ப்பட்டது. இதில் ஒரு பெண் டிஸ்சார்ஜ் செய்யப்ப ட்டார். மேலும் 3 பேர் ஆஸ்பத்தி ரியில் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். 

இதற்கி டையில் கைது செய்யப்பட்டவர்களிடம் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரச்சினையில் சுமூக தீர்வு எடுப்பதாக உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 147 பேர் மீதும் கோட்டார் போலீசார் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். எந்தவொரு அனுமதியும் இன்றி பொது மக்களுக்கு இடையூறாக போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.