கன்னியாகுமரி :
தக்கலை வாளோடு அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் விஜித்ரா (வயது 21).
பி.எஸ்.சி. பட்டதாரியான இவர், திங்கள் நகரில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று காலை வேலைக்கு சென்ற விஜித்ரா மாலையில் வீடு திரும்பவில்லை.
அவர் என்ன ஆனார்? என்ற விவரம் தெரிய வில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது.இதுகுறித்து அவரது தாயார் விமலா, தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான விஜித்ராவை தேடி வருகின்றனர். அவர் தானாக எங்காவது சென்றாரா? அல்லது யாராவது கடத்திச் சென்றார்களா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.