உள்ளூர் செய்திகள்

இரணியல் அருகே தொழிலாளி மாயம்

கடந்த 10-ந்தேதி வெளியே சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லைவழக்குப் பதிவு செய்த போலீசார் காணாமல் போன நவநீத கிருஷ்ணனை தேடி வருகின்றனர்

NGLSubramaniyan

கன்னியாகுமரி :

இரணியல் அருகே உள்ள செட்டியார்மடம் ஆதிதிராவி டர் காலனியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (வயது 43). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 10-ந்தேதி வெளியே சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து அவரது மனைவி இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் காணாமல் போன நவநீத கிருஷ்ணனை தேடி வருகின்றனர்.