உள்ளூர் செய்திகள்

திருவட்டார் அருகே ஜவுளிக்கடை ஊழியர் விஷம் குடித்து தற்கொலை

அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை ஆற்றூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.வழக்குபதிவு செய்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார்.

கன்னியாகுமரி :

திருவட்டார் அருகே உள்ள வட்டவிளை தேமாணூர் பகுதியை சேர்ந்தவர் சுனில்குமார் (வயது 35), இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் கணக்கராக வேலை பார்த்து வந்தார்.இவரதுமனவைி சுபி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

போலியோ நோயால் பாதிக்கப்பட்டு கால்கள் செயல் இழந்த சுனில்குமார், சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டலாம் என நினைத்துள்ளார். இதற்காக பலரிடம் பணம் கேட்டு வந்தார் ஆனால் பணம் கிடைக்கவில்லை. இதனால் மனவருத்தத்தில் சுனில்குமார் இருந்து வந்தார்.

சம்பவத்தன்று அவரை சாப்பிட வருமாறு மனைவி சுபி அழைத்துள்ளார். அப்போது, எலி மருந்து (விஷம்) சாப்பிட்டேன் என்று கூறிய சுனில்குமார் மயங்கி விழுந்தார். உடனே சுபி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை ஆற்றூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சுனில்குமார், நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரியில் அனும திக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுனில்குமார் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மனைவி சுபி, திருவட்டார் போலீசில் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் ஜானகி வழக்குபதிவு செய்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார்.