பறிமுதல் செய்யப்பட்ட டெம்போ 
உள்ளூர் செய்திகள்

குழித்துறை அருகே செங்கல் சூளைக்கு செம்மண் கடத்திய டெம்போ பறிமுதல், ஒருவர் கைது

குழித்துறை அருகே செங்கல் சூளைக்கு செம்மண் கடத்திய டெம்போ பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மாலை மலர்

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட திக்குறிச்சி பகுதியில் செங்கல் சூளைக்கு அனுமதி இன்றி செம்மண் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் திக்குறிச்சி பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  

அப்போது வேகமாக வந்த டெம்போவை மடக்கி சோதனை செய்தபோது, அனுமதியின்றி டெம்போவில் செம்மண் கடத்திவரப்பட்டது தெரியவந்தது.

டெம்போவை பறிமுதல் செய்த போலீசார், திக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சஞ்சய் பிரபு (வயது 40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.