உள்ளூர் செய்திகள்

தோவாளை செக்கர் கிரி முருகன் கோவிலில் சூரசம்ஹார விழா

18-ந்தேதி நடக்கிறதுகேரள பஞ்ச வாத்தியங்களோடு வானவேடிக்கையுடன் சூரசம்ஹாரவிழா நடைபெற உள்ளது.

ஆரல்வாய்மொழி :

தோவாளை செக்கர்கிரி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக சூரசம்ஹார விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலையில் கணபதி ஹோமம், வேலவனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்பு ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டினர்.

வருகிற 18-ந்தேதி செக்கர்கிரி மலையில் வேலவன் பல்லக்கில் எமுந்தருளல், பின்பு போர் கோல முருகனாக குதிரை வாகனத்தில் சூரசம்ஹாரத்து எழுந்தருளி அதிர்வேட்டு முழங்க, கேரள பஞ்ச வாத்தியங்களோடு வானவேடிக்கையுடன் சூரசம்ஹாரவிழா நடைபெற உள்ளது.

இரவு வெற்றிவேலவன் மயில் வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். வருகிற 19-ந்தேதி வேலவன் ஆராட்டுக்கு எழுந்தருளல், அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை, வேலவன் பச்சை சாத்தி எழுந்தருளுதல், சிறப்பு அன்னதானம் ஆகியவைகள் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை விழா குழு செய்து வருகிறது.

SCROLL FOR NEXT