உள்ளூர் செய்திகள்

சுசீந்திரத்தில் ராகவேந்திரர் பவனி

சுசீந்திரம் புறவழிச் சாலையில் அமைந்துள்ள ஜகத்குரு ராகவேந்திரா கோவிலில் ஆராதனை விழா நடைபெற்று வருகிறது.நிகழ்ச்சியில் விழா ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி:

சுசீந்திரம் புறவழிச் சாலையில் அமைந்துள்ள ஜகத்குரு ராகவேந்திரா கோவிலில் ஆராதனை விழா நடைபெற்று வருகிறது. விழாவின் 3-ம் நாள் மாலை 4 மணிக்கு அலங்கார ஊர்தியுடன் மந்த்ராலயத்தில் இருந்து சிங்காரி மேளம் முழங்க பல்லக்கில் ராகவேந்திரர் பவனி வந்தார். நிகழ்ச்சியில் விழா ஒருங்கிணைப்பாளர்கள் மணிகண்டன், சதீஷ் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.