உள்ளூர் செய்திகள்

திருவட்டார் அருகே இரு சக்கர வாகனம் விபத்தில் புது மாப்பிள்ளை சாவு

சாலையில் நடந்து சென்ற சிறுமியின் கை வாகனத்தின் கண்ணாடியில்பட்டது.திருமணமாகி 8 மாதங்கள் தான் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

திருவட்டார் :

திருவட்டார் அருகே உள்ள வடக்கன்நாடு பகுதியை சேர்ந்தவர் நவீன் (வயது 28), லாரி டிரைவர்.

நேற்று இரவு இவர் வீட்டில் இருந்து பூவன் கோடு நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது சாலையில் நடந்து சென்ற சிறுமியின் கை வாகனத்தின் கண்ணாடியில் பட்டது.

இதனால் நவீன், தனது வாகனத்தை திருப்பிய போது எதிரே வந்த அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இந்த விபத்தில் நவீன் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். அவரை அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களும் உறவினர்களும் சேர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி நவீன் பரிதாபமாக இறந்தார். இவருக்கு திருமணமாகி 8 மாதங்கள் தான் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்து குறித்து அவரது மனைவி ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தின் டிரை வரை போலீசார் தேடி வருகிறார்கள். திரும ணமான 8 மாதத்தில் புது மாப்பிளை விபத்தில் இறந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.