நாகர்கோவில்:
தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
எர்ணாகுளம்-கோட்டயம்-காயங்குளம் பிரிவில் சிங்ஙவனம்-ஏற்றுமானூர் ரெயில் நிலையங்கள் இைடயே இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெறுவதால் மே 12 (இன்று) முதல் 28 வரை ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரெயில் எண்.16526 கே.எஸ்.ஆர். பெங்களூரு- கன்னியாகுமரி ஐலண்ட் எக்ஸ்பிரஸ் மே 23 முதல் 27 வரை 5 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. ரெயில் எண் 16525 கன்னியா குமரி-கே.எஸ்.ஆர். பெங்களூரு ஐலண்ட் எக்ஸ்பிரஸ் மே 24 முதல் 28 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
ரெயில் எண்.16649 மங்களூரு சென்ட்ரல்- நாகர்கோவில் சந்திப்பு பரசுராம் எக்ஸ்பிரஸ் மே 20 முதல் 28 வரையும், ரெயில் எண்.16650 நாகர்கோவில் சந்திப்பு-மங்களூரு சென்ட்ரல் பரசுராம் எக்ஸ் பிரஸ் மே 21 முதல் 29 வரையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இவை உள்பட 22 ரெயில்கள் இவ்வழித்தடத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரெயில் எண்.16649 மங்களூரு சென்ட்ரல்- நாகர்கோவில் சந்திப்பு பரசுராம் எக்ஸ்பிரஸ் மங்க ளூர் சென்ட்ரலில் இருந்து மே 12 முதல் 19-ந்தேதி வரை புறப்படுவது எர்ணா குளம் டவுன்-காயங்குளம் சந்திப்பு இைடயே போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டு ஆலப்புழா வழி செல்லும்.
இதனால் திருப்பு ணித்துறா, பிறவம் ரோடு, ஏற்றமானூர், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கன்னூர், மாவேலிக்கரை ஆகிய நிறுத்தங்கள் கிடையாது. எர்ணாகுளம் சந்திப்பு, சேர்த்தலா, ஆலப்புழா, அம்பலப்புழா மற்றும் ஹரிப்பாடு ஆகிய இடங் களில் நிறுத்தங்கள் அனும திக்கப்பட்டுள்ளன. இதனை போன்று ரெயில் எண்.16382 கன்னியாகுமரி- புனே சந்திப்பு தினசரி எக்ஸ்பிரஸ் மே 12, 13, 14, 15, 17, 18, 19, 20, 21, 24, 25, 26, 27, 28 தேதிகளில் ஆலப்புழா வழி செல்லும்.
ரெயில் எண்.16525 கன்னியாகுமரி-கே.எஸ்.ஆர். பெங்களூரு ஐலண்ட் தினசரி எக்ஸ்பிரஸ் மே 21-ந்தேதி ஆலப்புழா வழி இயக்கப்படும். ரெயில் எண்.16526 கே.எஸ்.ஆர். பெங்களூரு- கன்னியாகுமரி ஐலண்ட் தினசரி எக்ஸ்பிரஸ் மே 20, 21-ந்தேதிகளில் ஆலப்புழா வழி செல்லும்.
ரெயில் எண்.12659 நாகர் கோவில் சந்திப்பு-ஷாலி மார் குருதேவ் வாராந்திர எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் சந்திப்பில் இருந்து மே 22 புறப்படுவது, ரெயில் எண். 15906 திப்ரூகார்-கன்னியா குமரி விவேக் சூப்பர் பாஸ்ட் திப்ரூகாரில் இருந்து மே 21-ந்தேதி புறப்படுவது,
ரெயில் எண்.16336 நாகர்கோவில் சந்திப்பு-காந்திதாம் சந்திப்பு வாராந்திர எக்ஸ்பிரஸ் நாகர்கோவிலில் இருந்து மே 24-ந்தேதி புறப்படுவது, ரெயில் எண்.12660 ஷாலிமார்-நாகர்கோவில் சந்திப்பு குருதேவ் வாராந்திர சூப்பர் பாஸ்ட் ஷாலிமாரில் இருந்து மே 25-ந்தேதி புறப் படுவது ஆலப்புழா வழி செல்லும்.
ரெயில் எண்.16525 கன்னியாகுமரி-கே.எஸ்.ஆர். பெங்களூரு ஐலண்ட் எக்ஸ்பிரஸ் 15 முதல் 30 நிமிடங்கள் மே 12, 14, 17 மற்றும் 19-ந்தேதிகளில் சிங்கவனத்தில் நிறுத்தி விடப்படும்.
ரெயில் எண்.15906 திப்ரூகார்-கன்னியாகுமரி விவேக் சூப்பர் பாஸ்ட் 45 நிமிடங்கள் எர்ணாகுளம் டவுன்-கோட்டயம் இடையே மே 17-ல் நிறுத்தி விடப்படும்.
ரெயில் எண்.16382 கன்னியாகுமரி-புனே சந்திப்பு எக்ஸ்பிரஸ் 30 நிமி டங்கள் காயங்குளம் சந்திப்பு-சிங்கவனம் இடையே மே 22-ந்தேதி நிறுத்தி விடப்படும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.