நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொரோனா மூன்றாம் அலை பரவி வரும் நிலையில் சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்க்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாத்தூர் தொட்டில் பாலத்தில் சுற்றுலா பயணிகள் வருவதற்கு மாவட்ட ஆட்சியரின் மறு உத்தரவு வரும் வரை அருவிக்கரை ஊராட்சி மன்ற தலைவர் சலேட்கிளிட்டஸ்மேரி ஏற்பாட்டில் தொட்டில் பாலத்தின் நுழைவு வாயலில் தடுப்பு கட்டைகள் வைத்து மூடப்பட்டுள்ளது.
ஊராட்சி பணியாளர் ஒருவரை அமர்த்தி சுற்றுலா பயணிகள் தடுத்து திருப்பி அனுப்பப்படுகிறது.