உள்ளூர் செய்திகள்

நாகர். கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை - கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 55 மதிக்கத்தக்க ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட பிரகாஷ் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

நாகர்கோவில் :

நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 55 மதிக்கத்தக்க ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து உத்தரகாண்டை சேர்ந்த பிரகாஷ் (வயது 70) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரகாஷ் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு நீதிபதி ஜோசப் ஜாய் விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த பிரகாஷ் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது குற்றம் சாட்டப்பட்ட பிரகாசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பு கூறினார். ரூ. 500 ரூபாய் கட்ட தவறினால் மேலும் மூன்று மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மதியழகன் ஆஜரானார்.

SCROLL FOR NEXT