கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

தக்கலை அருகே காய்கறி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை.

தக்கலை அருகே காய்கறி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

மாலை மலர்

கன்னியாகுமரி:

தக்கலை அருகே கவியலூர் காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது47). இவர் சுவாமியார்மடத்தில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். கடந்த ஒரு வருடம் காலமாக வியாபாரத்தில் பலத்த நஷ்டம் ஏற்பட்டது. இதனால் பலரிடம் கடன் வாங்கி வியாபாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று அவரது மனைவி  தாயார் வீட்டுக்கு சென்றதும் கிறிஸ்டோபர்  விஷம் குடித்து மயங்கி விழுந்தார். வெகுநேரம் கழித்து மனைவி வீட்டில் வந்து பார்த்த போது கணவர் வாயில் நுரை தள்ளியபடி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

உடனே அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில்  சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர் இவரை பரிசோதனை செய்து பார்த்த போது ஏற்கனவே இறந்து விட்டதாக  கூறினார். 

இது சம்பந்தமாக இவரது மனைவி ராஜினி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.