உள்ளூர் செய்திகள்

வடசேரியில் மது விற்றவர் கைது

போலீசார் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது மது பாட்டில்களை பதுக்கி விற்பது தெரியவந்தது.அவரிடம் இருந்து 37 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன.

நாகர்கோவில் :

வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்சிங் தலைமையிலான போலீசார் நாடான்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர், போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது மது பாட்டில்களை பதுக்கி விற்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 37 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர் வாத்தியார்விளை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 42) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT