உள்ளூர் செய்திகள்

வடசேரியில் ரெட் கிராண்ட் அசைவ உணவக திறப்பு விழா

உணவகத்தை விஜய் குரூப் ஆப் ஹோட்டல்ஸ் நிறுவனர் ராமதாஸ் திறந்து வைத்தார். பிஎன்ஐ, ரோட்டரி சங்க நண்பர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நாகர்கோவில் :

நாகர்கோவிலில் வடசேரி எம்.எஸ். ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ெரட் கிராண்ட் என்ற பாரம்பரிய அசைவ உணவகத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

உணவகத்தை விஜய் குரூப் ஆப் ஹோட்டல்ஸ் நிறுவனர் ராமதாஸ் திறந்து வைத்தார். விழாவிற்கு திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நயினார் நாகேந்திரன், கே.ஆர். டிராவல்ஸ் உரிமையாளர் குமார் செல்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹோட்டல் பிரபு உரிமை யாளர் ஆனந்தன் முதல் விற்பனையை ஆரம்பித்து வைத்தார். பிசினஸ் நெட்ஓர்க் இன்டர்நேஷனல் அமை ப்பின் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களின் மண்டல இயக்குநர் முகமது ரியாஸ் முதல் விற்பனையை பெற்று கொண்டார்.

எஸ்.ஜே. மருத்துவமனை டாக்டர் ரூத் திலீப்குமார், டவர் ரெடிமேட்ஸ் உரிமையாளர் ஜியாவுதின், வி.ஐ.பி. ஜிம் உரிைமயாளர் சரவணசுப்பையா, பேபி மசாலாமுத்து உள்பட பிஎன்ஐ, ரோட்டரி சங்க நண்பர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திறப்பு விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை ரெட் கிராண்ட் உணவக உரிமையாளர் சுகுமாரன் ராமதாஸ், சுஜாதா சுகுமாரன் மற்றும் நிறுவன பணியாளர்கள் செய்திருந்தனர்.