உள்ளூர் செய்திகள்

ராஜாக்கமங்கலம் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

வீரனின் சகோதரி மகள் திருமண அழைப்பிதழில் வீரனின் பெயர் இடம் பெறவில்லை.உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை

கன்னியாகுமரி :

ராஜாக்கமங்கலம் அருகே சிவசெல்வபுரத்தைச் சேர்ந்தவர் வீரன் (வயது 38), கட்டிட தொழிலாளி.

இவருக்கும் மனைவி நந்தினிக்கும் இடையே அடிக்கடி தகராறு நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் வீரனின் சகோதரி மகள் திருமண அழைப்பிதழில் வீரனின் பெயர் இடம் பெறவில்லை.

இது தொடர்பாக வீரனுக்கும் அவரது மனைவி நந்தினிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்திருந்த வீரன், தாராவிளை பகுதியிலுள்ள தென்னந்தோப்பில் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். நேற்று அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ராஜாக்க மங்கலம் போலீசார் வீரனின் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்ப டைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வீரனின் மனைவி நந்தினி கொடுத்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.